ஆச்சர்யமாக உள்ளது அல்லவா, எனக்கும் தான்.ஹிந்துக்களின் சாதனைகளை பற்றிய தேடலில் எனக்கு கிடைத்த ஒரு ஆச்சர்யம் கலந்த அபூர்வமான விசயத்தை உங்களுக்கு இங்கே பகிர்கிறேன்.

உலகில் வாழ்த்த பல
பழமையான இனங்கள் ஜோதிடத்தில் சிறந்து விளங்கியதை நாம் அனைவரும் அறிந்ததே,
இந்த ஜோதிடத்திலும் தமிழ் இனம் தான் தனித்து விளங்கியது என்பது உங்களுக்கு
தெரியுமா ? ! .ஆம் ஹிந்துக்களின் ஜோதிடத்தில் ஒரு பிரிவான " நாடிஜோதிடம் "
பற்றிய செய்திகளைப் பற்றிதான் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்
.உலகில் வாழ்ந்த பில பழமையான இனங்கள் உடலின் பாகங்களையும், ஜாதகத்தையும்
வைத்து தான் ஜோதிடம் கணித்தது. அனால் 4000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த
ஒருவர், அன்று வாழ்ந்தவர்களை பற்றியும், இன்று வாழ்ந்து
கொண்டிருப்பவர்களைப் பற்றியும், நாளை இந்த பூமியல் பிறக்கப் போகிறவர்களின்
வாழ்கைப் பற்றியும் துல்லியமாக அதை தனித்தனி பனை ஓலைகளில் எழுதி வைத்து
விட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா ? அதெப்படி இத்தனை கோடி மக்களின்
வாழ்கையை 4000 வருடங்களுக்கு முன்னரே கணிக்க முடிந்தது ? இந்த கேள்வி
உங்கள் மனதில் நிச்சயம் எழலாம்.ஆம் உங்களின் மொத்த வாழ்கையைப் பற்றிய பனை
ஓலை ஏதோ ஒரு அறையில் சப்தமிலாமல் உறங்கிக்கொண்டிருக்கிறது.! .இதை எழுதியவர்
18 சித்தர்களில் தலை சிறந்த சித்தரான " அகத்தியர் ". இந்த பூமியில் பிறந்த
ஒவ்வொருவரை பற்றியும், இனி பிறக்கப் போகிறவர்களைப் பற்றியும் கணித்து பனை
ஓலைகளில் எழுதிவிட்டார் ! "
வட்டெழுத்து " என்ற
பண்டைய தமிழ் எழுத்தில் நம் தலை எழுத்து எழுதப்பற்றிக்கின்றது. இதை
ஆண்களுக்கு வலது கை கட்டை விரல் ரேகையை வைத்தும், பெண்களுக்கு இடது கை கட்ட
விரலை வைத்தும் எழுதப்படிருக்கின்றது.உங்கள் ஓலையை கண்டுபிடிக்க நீங்கள்,
உங்கள் ரேகையை கொடுக்க வேண்டும் சில மணி நேரத்தில், உங்கள் ஓலை கண்டு
பிடிக்கப்படும் . கண்டு பிடித்த ஓலை உங்களுடையது தான என சரிபார்க்க
,உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும் அதற்கு நீங்கள் ஆம் ,இல்லை என்ற
பதிலை கூறினாலே போதுமானது.எல்லா பனை ஓலைகளிலும் " சிவபெருமானை " புகழ்ந்து
முதல் வரி எழுதப்பட்டுள்ளது. அடுத்த வரிகளில் உங்கள் " பெயர்", " தந்தையின்
பெயர்", " தாயின் பெயர் ", நீங்கள் செய்து கொண்டிருக்கும் தொழில், இனி
நீங்கள் செய்யப்போகும் தொழில் இது முதல் CHAPTER ல் தெரிவிக்கிறது. இது
போன்று 12 CHAPTER கள் உள்ளன !! . இவற்றில் உங்களின்
கல்யாணம்,மனைவி, குழந்தை, உறவினர்கள், உடல் நலம், வியாதி, விபத்து என்று
அடுக்கிக் கொண்டே போகின்றது .இது போன்று இன்று வாழும் கோடிக்கணக்கான மக்களை
பற்றியும் எழுதப் பட்டிருக்கிறது. நம்புவதற்கு கஷ்டமாகத் தான் இருக்கும்.
ஆனால் அத்தனையும் உண்மை.இந்த "அகத்தியர் " என்பவர் வெறும் ஜோதிடத்தை
மட்டும் கணித்தவர் அல்ல. " வர்மம்", " சித்த மருத்துவம் " போன்று இன்னும்
பல கலைகளை தந்து விட்டு சென்றுளார்.இந்த கலைகள் அனைத்தும் இன்று அழிவின்
விளும்பில் உள்ளது. " அகத்தியர் " , " திருமூலர் " , " கோரக்கர் " " போகர்
" என மொத்தம் 18 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர், அவர்களில் ஒவ்வொருக்கும் 8
தனிப்பட்ட சக்திகள் இருந்துள்ளது. இதில் " அணிமா " ( ஒரு அணுவை விட
சிரியதாவது ) , " மகிமா " ( மாபெரும் உருவமேடுப்பது ) , " லகிமா " ( ஆவியை
போன்று மெலிதான தோற்றத்திற்கு செல்வது ) ," ப்ராப்தி " ( வேறொருவர்
உடலுக்குள் ஊடுருவது ) , இவாறு ஏகப்பட்ட கலைகளின் திறமையை பெற்றிருந்தறனர்.
இந்த
கணிக்கப்பட்ட நாடி ஜோதிட பனை பல ஓலைகலானது மக்களின் மூட நம்பிக்கைகளால் "
ஓடும் ஆற்றில் ஓலைகளை விட்டால் பாவம் தீரும் என்பதாலும் " , " போகிப்
பண்டிகையின் போது பழையன எரிக்க வேண்டும் என்பதாலும் " ' " வெள்ளையர்கள் நம்
நாட்டின் மீது படை எடுக்கும் போது அவற்றை கைப்பற்றி அழித்தாலும் " , "
சிலவற்றை ஏலத்தில் விட்டதாலும் பல ஓலைச் சுவடிகள் அழிந்து விட்டது !!.
மீதம் இருப்பவை சிலவே, அதில் உங்களுடைய வாழ்கையை குறிக்கும் ஓலையும்,
என்னுடைய வாழ்கையை குறிக்கும் ஓலையும் யாரிடம் சிக்கி உள்ளது என
தெரியவில்லை !!.என்னுடைய ஓலையை தேடி நான் விரைவில் பயணிக்க இருக்கிறேன்.
கடைசியாக
" நாடி " என்றால் என்ன ? பழந்தமிழில் இதற்கு " தேடுவது " என பொருள். எந்த
தேதியில், எந்த இடத்தில, என்ன செய்தோம் ,என்ன செய்யப்போகிறோம் என்று 4000
வருடங்களுக்கு முன் வாழ்ந்த நம் தமிழ் ஹிந்துக்களின் சித்தர்கள் கணித்திருப்பது சாதாரண
விசயமே அல்ல !!!..

No comments:
Post a Comment