ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Tuesday, March 6, 2012

வேதமும், தமிழும்,ஆன்மிகமும்


நமது இந்துமதத்தில் அன்பர்கள் ஆன்மிக உயர்வுபெறவும், நல்வாழ்வு வாழவும், அவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்து உயர்நிலை அடையவும் வழிகாட்டுதலாகவும் உற்ற துணையாகவும் இருப்பவை மறை நூல்கள் அவை பலவகைப்பட்டவையாகவும், பல்வேறு பெரியோர்களால் இயற்றப்பட்டவையாகவும் உள்ளன-இவற்றிற்கு மறைஎன்றோ, நீதிநூல்கள் என்றோ,திரு முறை என்றோ உங்களுக்கு விருப்பப்பட்ட பெயரை வைத்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் நாம் அதற்கு ஒரு பெயரை வைக்கப்போய் அதற்கும் நம்மை யாராவது ஆரிய(?) தமிழன் என்று திட்டுவார்கள் (நல்லதுதானே) . அனைத்து இந்துமத மறைகளுக்கும் அடிப்படையும் ஆதாரமுமாக இருப்பவை வேதங்கள்

நமது தமிழ்நாட்டிலும் தமிழில் அத்தகைய பல தமிழ் நூல்கள் ஆன்மிக சான்றோர்களால் இயற்றப்பட்டுள்ளன,அவை தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் போன்ற பல நூல்களாகும். இவ்வாசிரியர்கள் யாருமே வேதங்கள் பொய் என்றோ, அவை அமைந்துள்ள மொழியான சமஸ்கிருதம் கூடவே கூடாதென்றோ கூறவே இல்லை. ஆனால் தமிழை உயர்த்துவதாக கூறுபவர்கள் தமிழில் அறம்,பொருள்,இன்பம்,வீடு,(இவற்றில் வீடு நீங்கலாக மற்றவை பால் எனும் பெயரில் திருக்குறளில் ஆளப்பட்டுள்ளது,அறம் எது எனக் கூறுவதும் வேதம்தானே) எனும் பெயர்களில் வேதங்கள் இருப்பதாக கூறுகிறார் ஆனால் தமிழில் ஆன்மிக அமுதம்தந்த சான்றோர், அப்படிப்பட்ட வேதங்கள் இருப்பதாககக் கூறியதாகதத் தெரியவில்லை,மாறாக வேதத்தின் கருத்துக்களை தமிழில் தந்ததோடல்லாமல் தேவைப்படும் இடங்களில் வடமொழி வார்த்தைகளைப் பயன்படுத்தியும் உள்ளனர்
.
வடமொழியில் உள்ள வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை அது ஏதோ ஒரு இனக்குழுவால் உருவாக்கப்பட்டது அல்ல. ஏதோ ஒரு இனத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் இறைவன் ஞானத்தை அருளவில்லை.பல்வேறு காலகட்டங்களால் பல்வேறு ஆன்மா ஞானிகளுக்கு இறைவனால் அருளப்பட்டதே வேதம். அதைதத் தொகுத்தவர் வியாசர் எனும் மீனவர். அதேபோன்று சமஸ்கிருதம் ஏதோ ஒரு இனத்தின் மொழி அல்ல அது அனைவருக்கும் பொது மொழி. சமஸ்கிருதத்தில் பல அற்புத நூல்களை பல தமிழறிஞர்கள் இயற்றி உள்ளனர்.

வடமொழியில் காவ்யாதர்சம் எழுதியவர் காஞ்சியைச் சார்ந்த தண்டி எனும் தமிழர்,அத்வைதம் கூறிய சங்கரரும், விஷிஷ்டத்வைதத்தை விளக்கிய இராமானுஜரும் தென்னகத்தைச் சார்ந்தவர்கள். தமிழர் வேறு சமஸ்கிருதம் வேறு என்பது பாதிரியார்கள் தோண்டிய பள்ளம்.

ஆகவே ஆன்மிக நாட்டம்கொண்ட, ஆன்மிகத்தில் உயர்வடையவிரும்பும் தமிழர்கள் வடமொழியை கற்றுக்கொண்டால் நல்லதுதானே. சரி முழுமையாகக் கற்றுக்கொள்ள நேரமில்லை வாய்ப்பும் இல்லை என்றால் அம்மொழியில் உள்ள உன்னத கருத்துக்களைக்கொண்ட பாடல்களைப் பாடி ஆத்மானந்தம்பெறல் ஒன்றும் தகாத செயல் அல்லவே.

நாம் இங்கு தமிழ்பாடல்களையும் நூல்களையும் புறந்தள்ளிவிட்டு வடமொழியில் பேசித்திரியவேண்டும் என்று ஒருபோதும் கூறவில்லையே, நாம் கூறவிரும்புவது இன, மொழி,எல்லைகளைக்கடந்து, மானிடர் அனைவரும் பயன்பெறவேண்டும் எனும் உயரிய நோக்கில், இந்தியத் திருநாட்டில் வாழ்ந்த வெவ்வெறு மொழிகளைத் தாய்மொழியாகக்கொண்ட ஆன்மிக பெரியோர்கள் தமது அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் வடமொழியில் நூல்களாக வைத்துள்ளனர் என்பதே.. அவற்றை வடமொழியின் வாயிலாகக் கற்காவிடினும் மொழிபெயர்த்துக்கற்றலில் தவறேதும் இல்லையே.


தம்பி அருன்ப்ரகாஷ் நமது "வடமொழியும் தென்மொழியும்" எனும் கட்டுரைக்கு கருத்திடும்போது, கோவில்களிலும்,வீடுகளில் சடங்குகளின்போதும் வடமொழிமட்டுமே பயன்படுத்தப்படும்போது ஏதும் புரிவதில்லை என்று கூறுகிரார், இதற்கு என்ன செய்யலாம்

1) புரிகிறதோ இல்லையோ அதன் சந்த நயம் நமது உள்ளுணர்வைக் கண்டிப்பாக உயர்த்தும்

2) தனிப்பட்டவகையில் செய்யும்பொழுது புரோகிதரிடம் சடங்குமுடிந்தவுடன் அம்மந்திரங்களுக்கான விளக்கங்களைக் கேளுங்கள்

3) விளக்கங்கள் கூறக்கூடாது எனும் நிலை இருக்குமாயின் விட்டுவிடுங்கள் அதனாலென்ன, கம்ப்யூட்டர் நிபுணர் எழுதும் புரோகிராம்கூட அனைவருக்கும் விளக்கப்படுவதில்லை எழுதப்படும் ப்ரோகிராம் புரியவில்லை என்பதற்காக நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமலா இருக்கிறோம்?

4)கோவில்களில் வடமொழி மட்டுமே பயன்படுத்தப்பட்டால்,தமிழ்பாசுரங்களும் பாடப்படவேண்டும் என்று வலியுறுத்துங்கள்

5) பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்லோகங்களுக்காண பொருளை தெளிவுபடுத்தக்கூடிய நூல்களை வாங்கிப் படித்து பொருளறிந்துகொள்ளுங்கள்

நாம் வாழ்க்கையில் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது நல்லது தானே. நாம் வாழ்க்கையில் முன்னேற ஆங்கிலம், பிரெஞ்சு,அரபி போன்ற மொழிகளையெல்லாம் கற்கிறோம் சம்ஸ்கிருதமும் கற்கலாமே

இக்காலத்தில்மட்டும் அல்ல அக்காலத்திலும் தமிழகத்தில் கோவில்களில் வேதம் ஓதப்பட்டது என்பதை "இருக்கொடு" என மாணிக்கவாசகர்பெருமான் கூறியதை "இருக்கு" என்பதன் பொருள் மந்திரம் என்பதாகவும் அது ரிக் வேதம் அல்ல என்றும் ஏன் யஜுர்,சாம,அதர்வண வேதம் ஓதப்படவில்லை என்றும் அன்பர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.மந்திரம் என்பது தூய தமிழ்சொல் என்றும் ஒருபதிவில் கூறியுள்ளார் இருக்கு என்பதற்கு மந்திரம் எனும் பொருள் வரக் காரணமே ரிக் வேதம் தான் ஏனென்றால் அவ்வேதம் மந்திரங்களால் அமைக்கப்பட்டது தானே
அவ்வாறு இல்லை என்றால் வேறு எந்தவிதமான மந்திரங்கள் ஓதப்பட்டன? அவை எதில் உள்ளன?

வேதத்தை விட்ட அறமில்லை,வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தைவிட்டு,மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. திருமந்திரம்-51

இவர் ரிக் முதலான வேதத்தை குறிப்பிடவில்லை என்றால் வேறு வேதத்தின் பெயரையோ அல்லது வேறு நல்ல தமிழ் சொல்லியோ பயன்படுத்தி இருக்கலாமே, ஒருவேளை வேதம் என்பதும் தூய தமிழ் சொல்லாக இருக்கலாம்

மீண்டும் மீண்டும் நாம் கூறவிரும்புவது தமிழ் மறை நூல்களைப் படிக்கவேண்டும் பொருள் உணரவேண்டும் அதேபோல் வடமொழி நூல்களையும் (அவற்றின் மொழிபெயர்ப்புகளையேனும்) படிக்கவேண்டும்,அப்பொழுது ஒன்று மற்றொன்றின் விளக்கமாகஇருப்பது தெரியும் ,புரியாத உண்மைகள் புரியும்.

தமிழுக்கும் வடமொழிக்கும் பகைமூட்டுவோர் இரண்டுவகையினர் என்று நாம் கருதுகிறோம்

1) தான்பெரிது,தன் மொழிமட்டுமே பெரிது எனும் குறுகிய மனப்பான்மையினர்

2)குழப்பவாதத்தின்மூலம் பாரத தர்மத்தின் இரண்டு செழுமைமிக்க பரம்பரியங்களுக்கிடையே இல்லாத வேறுபாட்டைப்புகுத்தி பகை உணர்வை வளர்த்து இரண்டும் தொடர்பற்ற வேறு வேறு வழிகள் என பொய்கூறிப் பிரித்து பின் ஒவ்வொன்றாக விழுங்கமுயலும் குள்ளனரிக் கூட்டத்தினர்

நன்றி


1) புரிகிறதோ இல்லையோ அதன் சந்த நயம் நமது உள்ளுணர்வைக் கண்டிப்பாக உயர்த்தும்

2) தனிப்பட்டவகையில் செய்யும்பொழுது புரோகிதரிடம் சடங்குமுடிந்தவுடன் அம்மந்திரங்களுக்கான விளக்கங்களைக் கேளுங்கள்

3) விளக்கங்கள் கூறக்கூடாது எனும் நிலை இருக்குமாயின் விட்டுவிடுங்கள் அதனாலென்ன, கம்ப்யூட்டர் நிபுணர் எழுதும் புரோகிராம்கூட அனைவருக்கும் விளக்கப்படுவதில்லை எழுதப்படும் ப்ரோகிராம் புரியவில்லை என்பதற்காக நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமலா இருக்கிறோம்?

4)கோவில்களில் வடமொழி மட்டுமே பயன்படுத்தப்பட்டால்,தமிழ்பாசுரங்களும் பாடப்படவேண்டும் என்று வலியுறுத்துங்கள்

5) பரவலாகப் பயன்படுத்தப்படும் ஸ்லோகங்களுக்காண பொருளை தெளிவுபடுத்தக்கூடிய நூல்களை வாங்கிப் படித்து பொருளறிந்துகொள்ளுங்கள்

No comments:

Post a Comment