ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் முன்னாள் தலைவரும் சங்கத்தின் மூத்த பிரச்சாரகருமான ஸ்ரீ.கு.சி.சுதர்சன் அவர்கள் ராய்ப்பூரில் 15/09/2012 காலை 6.30 மணி அளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது.81. வழக்கம் போல் காலையில் தனது நடைப்பயிற்சியை முடித்துவிட்டு பிராணாயாமம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மார்ச் 2000 முதல் மார்ச் 2009 வரை 9 வருடங்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சர்சங்கசாலக்காக (அகில பாரதத் தலைவர்) இருந்து வந்தார். உடல் நலக் குறைவு காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகி அப்பொறுப்பினை டாக்டர் மோகன் பாகவத் அவர்களிடம் ஒப்படைத்தார்.
1931 ஜூன் 18 ஆம் தேதியன்று ராய்ப்பூரில் பிறந்தவர். மத்திய பிரதேசத்தில் இருக்கின்ற சாகர் பலகலைக்கழகத்தில் தகவல் தொழில் நுட்பத்தில் பி.ஈ.ஹானர்ஸ் (B.E. Honours in Electronics & Communication) பட்டம் பெற்றவர். தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு தேசத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். 1953 முதல் சங்கப் ப்ரச்சாரக்காக (முழு நேரத் தொண்டர்) தனது பணியைத் துவங்கினார்.
தனது 9வது வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகராக இருந்து வந்தவர். தனது பட்டப்படிப்பினை முடித்துவிட்டு வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் சமுதாயப் பணிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். 1954 ஆம் வருடம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ப்ரசாரக்காக (முழு நேரத்தொண்டராக) தனது வேலையைத் துவக்கினார். துவக்கத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராய்கட், சாகர் மாவட்டங்களின் ஜில்லா ப்ரச்சாரக்காக பணிபுரிந்துள்ளார். 1964 ஆம் வருடம் மத்தியபாரதத்தின் ப்ராந்த ப்ரசாரக்காக பொறுப்பேற்று செயல் பட்டுள்ளார்.
1977 முதல் கௌஹாத்தியை மையமாகக் கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். சங்கத்தின் ஷாரீரிக் பிரமுகராகவும் (உடற்பயிற்சிப் பிரிவின் பொறுப்பாளர்) அதைத் தொடர்ந்து சங்கத்தின் அகில பாரத பௌத்திக் பிரமுக்காகவும் (சிந்தனைக் குழுவின் பொறுப்பாளர்) இருந்துள்ளார். 1990 முதல் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில பாரத சஹ சர்கார்யவாஹ் ஆக (அகில பாரத இணைப் பொதுச் செயலாளராக) பொறுப்பேற்று செயல்பட்டு வந்துள்ளார். இறுதியில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 5 வது சர் சங்கசாலக்காக (அகில பாரதத் தலைவராக) பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா உட்பட மேலும் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். சர்சங்க சாலக் பொறுப்பில் இருந்து விலகிய பிறகும் கூட நாடெங்கிலும் சுற்றுப் பயணம் செய்து வந்தவர்.
மிகச் சிறந்த சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர். உண்மையில் அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே இருந்துவந்தார். சாதாரண பிரச்சனையில் இருந்து நாட்டின் முக்கியமான பிரச்சனைகள் அனைத்தையும் பற்றி ஆழமான, தெளிந்த கருத்தும் சிந்தனையும் கொண்டவர். நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஸ்வதேசி அணுகுமுறை மற்றும் சிந்தனையே தீர்வாகும் எனத் தீவிரப் பிரச்சாரம் செய்துவந்தவர். மிகத் தீவிரமாக சங்கத்தின் அன்றாட ஷாகா வேளையில் அதிக ஆர்வம் கொண்டவர். அதில் அதிக கவனம் செலுத்தி ஷாகா வருகின்ற சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கு உற்சாகம் கொடுத்து வந்தவர்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர். பேட் என்கிற இடத்தில் இவரது பெற்றோர்கள் வசித்து வந்தனர். ஆனாலும் இவரது மூதாதையர்களின் பூர்வீகம் தமிழகத்தில் உள்ள செங்கோட்டை ஆகும்.
ராய்ப்பூரில் காலமான கே.எஸ்.சுதர்சன் அவர்களின் உடல் ஆர்.எஸ்.எஸ்.தலைமை இடமாகிய நாக்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலி செய்வதற்காக வைக்கப்பட்டு 16/09/2012 மாலை 3 மணிக்கு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்று முடிந்தன.

.jpg)

No comments:
Post a Comment