சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனனதினத்தை முன்னிட்டு ஈச்சிலம்பற்றுப் பகுதிக்கான எழுச்சி ஊர்வலமும்,கூட்டமும் இலங்கைத்துறை முகத்துவார இந்துக்கல்லூரியில் 22.11.2012ஆம் திகதியாகிய இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமானது. ஈச்சிலம்பற்றுக் கல்விக்கோட்ட பாடசாலைகளின் மாணவர்களும், அதிபர்,ஆசிரியர்களும்,பெற்றாரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். நண்பகல் 12.மணிக்கு எழுச்சி ஊர்வலம் நிறைவுபெற்று.அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது, இவ் விழாவுக்கு பிரதம விருந்தினராக ஈச்சிலம்பற்றுக் கோட்டக்கல்வி அதிகாரியும்,மூதூர் கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளருமாகிய திரு செ.லோகராஜா அவர்கள் கலந்துகொண்டார்கள்.சிறப்பு விருந்தினராக சிவயோகச் செல்வன் திரு.த.சாம்பசிவ சிவாசாரியார்(காயத்ரி பீடம் மட்டக்களப்பு) அவர்கள் கலந்துகொண்டார். சிறப்புப் பேச்சாளர்களாக திரு.வி.அருள்நேசராஜா(அதிபர்),திரு.ப.மதிபாலசிங்கம்(அதிபர்)திரு.சி.கணேசன்(ஆசிரியர்)திரு.வே.கேதீஸ்வரன்(ஆசிரியர்) ஆகியோர் குறிப்பிட்ட தலைப்புகளில் தமது கருத்துரைகளை வழங்கினர்.விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும்,பெற்றாரும்,பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.நூற்றாண்டு விழா மூதூர் பிரதேச இணைப்பாளர் திருமதி.உமா ரதீஸ்வரன் அவர்களின் சிறப்பு நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
ஏகாத்மதா ஸ்தோத்திரம்
Saturday, December 1, 2012
சுவாமி விவேகானந்தரின் 150வது ஜனனதின விழாவும், எழுச்சி ஊர்வலமும்.(ஈச்சிலம்பற்றுப் பிரதேசம்)
சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனனதினத்தை முன்னிட்டு ஈச்சிலம்பற்றுப் பகுதிக்கான எழுச்சி ஊர்வலமும்,கூட்டமும் இலங்கைத்துறை முகத்துவார இந்துக்கல்லூரியில் 22.11.2012ஆம் திகதியாகிய இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமானது. ஈச்சிலம்பற்றுக் கல்விக்கோட்ட பாடசாலைகளின் மாணவர்களும், அதிபர்,ஆசிரியர்களும்,பெற்றாரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். நண்பகல் 12.மணிக்கு எழுச்சி ஊர்வலம் நிறைவுபெற்று.அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது, இவ் விழாவுக்கு பிரதம விருந்தினராக ஈச்சிலம்பற்றுக் கோட்டக்கல்வி அதிகாரியும்,மூதூர் கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளருமாகிய திரு செ.லோகராஜா அவர்கள் கலந்துகொண்டார்கள்.சிறப்பு விருந்தினராக சிவயோகச் செல்வன் திரு.த.சாம்பசிவ சிவாசாரியார்(காயத்ரி பீடம் மட்டக்களப்பு) அவர்கள் கலந்துகொண்டார். சிறப்புப் பேச்சாளர்களாக திரு.வி.அருள்நேசராஜா(அதிபர்),திரு.ப.மதிபாலசிங்கம்(அதிபர்)திரு.சி.கணேசன்(ஆசிரியர்)திரு.வே.கேதீஸ்வரன்(ஆசிரியர்) ஆகியோர் குறிப்பிட்ட தலைப்புகளில் தமது கருத்துரைகளை வழங்கினர்.விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும்,பெற்றாரும்,பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.நூற்றாண்டு விழா மூதூர் பிரதேச இணைப்பாளர் திருமதி.உமா ரதீஸ்வரன் அவர்களின் சிறப்பு நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
Labels:
சுவாமிஜி 150
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment