அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் கூகுள் கம்பெனியின் ஒரு பிரிவுதான் விற்பனை உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஆண்டிராய்டு மொபைல் போன்கள். இந்த வகை போன்களை வடிவமைத்தவர் என்று புகழப்படும் ஆண்டி ரூபின் என்ற அமெரிக்கர் இதன் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார்.
தங்களின் அனைத்து சாப்ட்வேர் பிரிவுகளையும் ஒன்றாக இணைக்கவிருப்பதால், ஆண்டி ரூபின் பதவி விலகுகிறார் என்ற அறிவிப்பை கூகுள் நிறுவனம் நேற்று வெளியிட்டது. மேலும், அவர்களின் குரோம் வெப் பிரௌசர், கூகுள் டிரைவ், ஆப்ஸ் மற்றும் ஜி-மெயில் இவற்றின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சை என்ற இந்துத் தமிழரை ராபினின் பதவியில் நியமித்துள்ளது. இந்த முடிவின் மூலம் கம்பெனியின் தலைமையில் இருந்துவந்த நீண்டநாள் குழப்பம் தீர்க்கப்பட்டுள்ளது.
சுந்தர் பிச்சை (பி. 1967) ஒரு அமெரிக்க-வாழ் இந்துத் தமிழ்க் கணிபொறி பொறியாளர் (அறிவியலாளர்) ஆவார். ஐ.ஐ.டி கரக்பூரில் பொறியியல் பயின்ற இவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பட்டம் பெற்றார். தற்போது கூகிள் நிறுவனத்தின் பண்ட மேலாண்மைத்துறை துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார். Android உலகை ஆளுகிறது, அதில் இந்துத் தமிழன் தான் தலைவன் (சுந்தர் பிச்சை )
இவர் தற்போது கூகுளின் குரோம் வெப் பிரவுசரைக் கவனித்து வருபவர் ஆவார். மேலும் குரோம் ஆபரேட்டிங் சிஸ்டமும் இவர் வசம்தான் இருக்கிறது. இனிமேல் ஆண்ட்ராய்டையும் இவரே சேர்த்துப் பார்க்கப் போவதால் கூகுளுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கப் போகிறது.
அதாவது மொபைல் போன்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆண்ட்ராய்டுடன் கூகுள் குரோமும் இணைந்து இரட்டிப்பு பலனைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுவரை பர்சனர் கம்ப்யூட்டர்களும், மொபைல் போன்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பாதையில்தான் பயணித்து வருகின்றன. இதற்குக் காரணம் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள சில தொழில்நுட்பப் பிரச்சினைகள்தான்.
ஆனால் தற்போது ஆண்ட்ராய்டும், கூகுள் குரோமும் கை கோர்த்துள்ளதால் இந்த வேறுபாடு நீங்கி இரண்டும் ஒரே பாதையில் பயணிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. போன ஆண்டிலேயே கூகுள் செயல் தலைவர் எரிக் ஸ்மித், ஒரு நாள் ஆண்ட்ராய்டும், குரோமும் ஒன்று கலக்கும் என்று கூறியிருந்தார்தான்.ஆனால் தற்போதுதான் அது நிறைவேறும் வாய்ப்பு வந்துள்ளது. இப்போது பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்ட் பின்னணியில்தான் இயங்குகின்றன. அதேசமயம், கூகுளின் குரோம் ஆபரேட்டிங் சிஸ்டம் பிரபலமாக இருந்தபோதிலும், மொபைல் போன்களில் அது பெரிய அளவில் கால் ஊன்றாமல் இருக்கிறது.
இதற்கிடையில் சுந்தர் பிச்சையின் வழிகாட்டுதலில், கூகுள், குரோம் சிஸ்டம் பயன்பாட்டில் பல கம்ப்யூட்டர் வெளியீடுகளை அளித்துள்ளது. சென்ற மாதம் இவர், குரோம் புக் பிக்சல் என்று பெயரிடப்பட்ட குரோம் கணினிப் பயன்பாட்டுடனும், தொடுதிரையுடனும் கூடிய ஒரு லேப்-டாப்பை வெளியிட்டார்.

No comments:
Post a Comment