9ம் நூற்றாண்டில் கிராமபோனை கண்டு பிடித்த தாமஸ் அல்வா எடிசன் ,தனது கண்டுபிடிப்பை உலகிற்கு அறிமுகப்படுத்த விரும்பினார்.உலகப்புகழ் பெற்ற ஒருவரின் குரலை முதன் முதலாக கிராமபோனில் பதிவு செய்து ஒலிபரப்புவதன் மூலம் தம் கண்டு பிடிப்பு நல்ல வரவேற்பை பெறும் என்று எண்ணிய அவர் ஜெர்மானிய மேதையான பேராசிரியர் மார்க்ஸ் முல்லரின் குரலை பதிவு செய்து ஒளிபரப்பி காட்டினர்...அந்த நிகழ்ச்சியை கண்டு கூடயிருந்த அனைவரும் அதிசயித்தனர்.ஆனால மார்க்ஸ் முல்லர் எந்த மொழியில் பேசினார் என்பது மட்டும் விளங்க விலை.
அவரே அதனை பின்பு விளக்கினார்...
"உலக இலக்கியங்களில் எல்லாவற்றிலும் மிகத்தொன்மையான சமஸ்கிருத மொழியிலுள்ள "அக்னி மீளே ப்ரோஹிதம் " என்ற ரிக் வேதத்தின் முதல் அடியே நான் கூறியது என்றார்...உலகில் மிகத்தொன்மையான ஆன்மீக இலக்கியம் மிக நவீன கருவியுடன் அப்போது இணைந்து செயற்பட்டது...பகவான் ஸ்ரீ ராம கிருஸ்ண பரமஹம்சர் மேல் கொண்ட பேரன்பினால் சமஸ்கிருதம் கற்று கொண்ட முல்லர் உபநிசதங்களை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்து அச்சேற்றினார்..முதன் முதலில் உபநிசதங்கள் அச்சேற்றபட்டது இவரினாலேதான்..
உபநிடதங்கள் பற்றி முல்லர் பின்வருமாறு கூறுகிறார்.
"உபநிசதங்கள் புலரும் காலை பொழுதின் ஒளி போலவும் ,மலைச் சிகரங்களின் தூய காற்று போலவும் எளிமையும் உண்மையும் நிறைந்தவை."

No comments:
Post a Comment