ஓம்
என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கபட்டதின் காரணம் அதற்குள்
அடங்கிய பாசிட்டிவ் வைப்ரேஷன் எனப்படும் ஒரு நல்ல விஷயங்களுக்கான அதிர்வு
தான் அந்த வார்த்தை. ஆம் ஒரு சில கோயில்களிலும், அரண்மனைகளிலும், சில
வீடுகள் மடங்கள் இந்த மாதிரி இடத்திலும் நீங்கள் காணக்கூடிய ஒரு ஸ்ரீ
சக்கரம் (யந்த்ரம்) என்னவென்று பலருக்கு தெரியாது. பலர் இதை ஒரு செப்பு
தகடின் கிருக்கல்கள் என நினைத்திருக்கலாம். ஓம் என்ற சொல்லின்
உருவம் அல்லது படிவம் தான் என்று சயின்ஸ் நிருபித்துள்ளது. ஆம் ஹான்ஸ்
ஜென்னி என்னும் விஞ்சானி ஸ்விஸ் நாட்டை சேர்ந்தவர் தான் ஒலியின் பரிமானத்தை
நம் பார்வைக்கு கொண்டுவந்தவர். இவர் கண்டுபிடித்த சாதணம் தான் டோனோஸ்கோப்
(Tonoscope) என்னும் ஒரு வரலாற்று முக்கிய கருவி. இந்த டோனோஸ்கோப்பில் ஓம்
என்று உச்சரித்தால் ஸ்ரீ சக்ரா எனப்படும் யந்திர உருவத்தை .காண முடியும்
அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன். நீங்களும் உச்சரித்து பார்த்து
தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் இந்த உருவத்தை நாம் வரைந்து வைத்திருப்பதை
அதுவும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒம் என்ற உச்சரிப்பின் பரிமானம்
இது தான் என்று வேத ரிஷிகளும் முனிவர்களும் இதன் அர்த்தத்தை
உணர்ந்திருப்பது மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு பெரிய உண்மை........

No comments:
Post a Comment