தமிழ் மொழியை இந்திய ஆட்சி மொழியாக்க வேண்டும் என தமிழக கட்சிகளே இதுவரை முனைப்புடன் போராட முன்வராத நிலையில், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறி 66 ஆண்டுகள் ஆகியும் மொழி ரீதியாக தமிழர்கள் அடிமைப்பட்டே இருக்கும் நிலையில் வடநாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ் மொழயின் பெருமையை உரைத்து தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என கூறியுள்ளது நம்மையெல்லாம் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியை முடிந்தவரை இந்தியாவின் பட்டிதொட்டி எல்லாம் பெரும் பொருட்செலவில் இந்தி அல்லாத மக்களிடம் இந்திய அரசு வலுக்கட்டாயமாக திணித்து வருகிறது . இந்தி ஆத்திகத்திற்கு இரையாகி இன்று பல தேசிய இனங்கள் தங்கள் அடையாளத்தையும், தாய் மொழியையும் இழந்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் மூத்த இனமான தமிழினம் தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை இழந்து வருகிறது.
எங்கும் இந்தி எதிலும் இந்தி என்று ஒரு இனத்தின் தாய் மொழியை மற்ற இனத்தின் மீது இது வரை இந்திய அரசு திணித்து வந்து மொழித் தீண்டாமை கொள்கையை கடைபிடித்து வருகிறது . இதற்கு முடிவு கட்ட வேண்டுமெனில் தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது தான் ஒரே வழி. அதற்காக பாராளுமன்றத்தில் நியாயமாக தமிழர்கள் தான் குரல் கொடுக்க வேண்டும் . ஆனால் சந்தர்ப்பவாத தமிழக அரசியல் வாதிகள் அதை செய்யாமல் விட்டனர்.
இந்த நிலையில் தமிழை தாய் மொழியாக கொள்ளாத வடநாட்டு பா.ஜ.க(BJP) பா.ம உறுப்பினர் தருண் விஜய், தமிழை இந்தியாவின் இரண்டாம் ஆட்சி அலுவல் மொழியாக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார் . அவருக்கு தமிழர்கள் நாம் நன்றி பகிர்வோம்

No comments:
Post a Comment