ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Saturday, February 15, 2014

சத்ய நாராயணா நாடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி(CEO)


சத்ய நாராயணா நாடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆவார். ஸ்டீவ் பால்மரை தொடர்ந்து அவரது நியமனம் பிப்ரவரி 4, 2014 அன்று, மைக்ரோசாப்டால் அறிவிக்கப்பட்டது.முன்னதாக இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கணிமை இயக்குதளங்களையும், உருவாக்குநருக்கான கருவிகளையும், மேகக் கணிமை போன்றவற்றை உருவாக்கி நடத்தியுள்ளார்.

ஐதராபாத்தில் பிறந்த சத்ய நாடெல்லா முன்னாள் IAS அதிகாரியின் மகனாவார்.இந்து பிராமணிய குடும்பத்தில் பிறந்த இவர்  மணிப்பால் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். முன்னதாக ஐதராபாத்தின் பேகம்பட் பகுதியில் உள்ள ஐதராபாத்து பொதுப் பள்ளியில் பயின்றார். விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் மில்வாக்கி வளாகத்தில், கணினி அறிவியல் துறையில் பட்டமேற்படிப்பு முடித்தார். பின்னர் அவர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் உள்ள பூத் வணிக மேலாண்மைப் பள்ளியில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். முன்னதாக நாடெல்லா தற்போது ஆரக்கிள் நிறுவனத்தின் அங்கமாக உள்ள சன் மைக்ரோசிஸ்டம்சில் வேலை பார்த்துள்ளார். இவர் 1992ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றியுள்ள அவர் 'பிங்' தேடுபொறி (Bing) திட்டத்தில் ஒரு முக்கிய பொறுப்பு வகித்து அது வளர உதவியுள்ளார். தகவல்தளம், விண்டோஸ் சர்வர் மற்றும் உருவாக்குனர் கருவிகள் போன்ற மைக்ரோசாப்ட்டின் மிக பிரபலமான தொழில்நுட்பங்களில் சிலவற்றை மேகக்கணிமையின் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளார். மேகக்கணிமை வெளியிடான மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365ல் பங்காற்றியுள்ளார்

http://www.microsoft.com/en-us/news/ceo/index.html

No comments:

Post a Comment