ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Thursday, February 9, 2012

குமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்

குமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டை வரவேற்கும் விதமாக கன்னியாகுமரியில் மாபெரும் நிகழ்வு ஒன்று நடக்க இருக்கிறது. ஆர் எஸ் எஸ் பேரியக்கத்தின் மாநில அளவிலான கூடுதல் (பிராந்த சாங்கிக்) மற்றும் பிரம்மாண்டமான இந்து சங்கமம்.
இதில் 25,000 ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களையும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நாள்: பிப்ரவரி 12 (ஞாயிறு) மாலை 5 மணி.
இடம்: ராம்கோ காற்றாலை பண்ணை, குமாரபுரம் – காவல்கிணறு ஜங்சன், கன்யாகுமரி மாவட்டம்.
இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு அரு.இராமலிங்கம் அவர்கள் தலைமை வகிக்கிறார். ஆர் எஸ் இயக்கத்தின் அகில பாரத தலைவர் போற்றுதலுக்குரிய திரு. மோகன்ஜி பாகவத் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்.
அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்து ஒற்றுமையையும், தேசபக்தியினையும் வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த மாபெரும் நிகழ்ச்சிக்காக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருகை புரியும் இளைஞர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், சமூகத் தொண்டர்களுக்கும் உணவு, உறையுள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்குக் கணிசமான பொருளுதவி தேவைப் படுகிறது. இந்த நற்பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் டிமான்ட் டிராஃப்ட் அல்லது காசோலைளை ப்ராந்த் சாங்கிக் தக்ஷிண் தமிழ்நாடு (Pranth Sanghik Dakshin Tamilnadu) என்ற பெயரில் நாகர்கோவிலில் மாற்றத் தக்க வகையில் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு விரைவில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
“ஸ்ரீ விநாயகா”, விநாயகர் தெரு, செட்டிக் குளம், கோட்டார், நாகர்கோவில் – 629 002.
அல்லது நேரடியாக கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் நன்கொடைகளை செலுத்தலாம் –
SB A/c No: 31943012083
Name: Pranth Sanghik Dakshin Tamilnadu
State Bank of India – Nagerkovil Branch
IFSC code: SBIN0000880
வங்கிக் கணக்கில் செலுத்திய விவரங்களை kannankumbakonam @ gmail.com என்ற மின் அஞ்சலுக்குத் தெரிவிக்கவும்.
மேலும் விபரம் அறிய 04652-245824 மற்றும் 99766-89741 ஆகிய தொலைபேசி எண்களையோ அல்லது மேற்கண்ட மின் அஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளவும்.
இந்த உன்னத நிகழ்ச்சிக்கு இந்து தர்மத்தின் பல்வேறு துறவிகளும், சமயாசாரியர்களும் தங்கள் அருளாசியை வழங்கின்றனர்.
நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையிலும் ஏற்பாடுகளுக்கு உறுதுணை செய்யும் வகையிலும் ஒரு சீரிய வரவேற்புக்குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில் தொழிலதிபர்கள், சமூகத் தலைவர்கள், வணிகர்கள், கல்வியாளர்கள் என்று பல்வேறு வகைப்பட்ட சமூகப் பிரமுகர்கள் உறுப்பினர்களாக பங்கேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment