அதிசய லிங்கம் நிஷ்களங்க மகாதேவர். அதிசயம், அற்புதம், வியப்பு, இறையருள் இவையெல்லாம் ஒன்று கூடிய தலம்.
... வானமே கூரை, வழிந்தோடும் கடல் நீரே கோயில்
கட்டடம். குஜராத் மாநிலம்,பவ நகருக்கு அருகே 30 கி.மீ.தொலைவில் "கோளியாக் " எனும் ஊரின் கடற்கரைக் கோயில்தான் அது. காலத்தால் பழமையானது.
கடலில் நீர் உள்வாங்கும், 5 கி.மீ. தூரம் கடல் அடிநிலம்
சேறும், மண்ணுமாகத் தெரியும். நடுவே அமைந்திருக்கின்ற
மேட்டு நிலம்தான் நிஷ்களங்க மகாதேவர் கோயில் ஆகும்.
தரையை விடச் சற்றே உயர்ந்த இடம், கருங்கல் பாறை
மேடு, நடுவே சிறிய குளம், ஆங்காங்கே மூன்று பெரிய,சிறிய
சிவலிங்க பாணங்கள், நந்தியும் உண்டு.
கடல் நீர் உள் வாங்கியதும், கரையோர மக்கள்
கடற்சேற்றில் இறங்கி, நடந்து, விழுந்து, எழுந்து தட்டுத்
தடுமாறி அவ்விடத்தை அடைகின்றனர்.
காலை 9 மணி வாக்கில் கடல் உள்வாங்கும். மதியம்
2 மணியளவில் நீர் வரத்து ஆரம்பிக்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில் அங்கு சென்று 5000 ஆண்டு பழமை வாய்ந்த, பாண்டவர்கள் நிறுவிய, அந்த
சிவலிங்கங்களுக்கு பூஜை முடித்துத் திரும்புவர். பின்னர் மூன்று மணிக்கு மேல் நடந்து செல்லும் இடமெல்லாம் நீர் சூழ்ந்து கடலாய் தெரியும். தூரத்தில் மட்டும் கடலலைகள் மோத, கொடிமரம், சூலம் இவை மட்டுமே
தெரியும்.
இறைவன் :- நிஷ்களங்க மகாதேவர்
அமைவிடம் :- கோளியாக் எனும் கிராமம்
மாநிலம் :- குஜராத்
வழி :- சென்னை-ஆமதாபாத் -பவநகர் புகைவண்டிப்பயணம்.
பவநகரில் இருந்து பேருந்து,ஆட்டோ.
வரலாறு :- கௌரவர்களைப் போரிலே அழித்து, வெற்றி
வாகை சூடிய, பாண்டவர்கள் போரில்
உடன் பிறப்புகளையும், பிறரையும் கொன்று
குவித்தனர்.அதனால் "பிரும்ம ஹத்தி" எனும்
தோஷம் சேர்ந்தது. அதிலிருந்து விடுபடவும்,
தங்களது களங்கம் போகவும் சிவபெருமானை
ஸ்தாபித்து வழிபட்டனர். அவர்களுக்கு அருள் புரிந்த
இறைவன் அவர்களது களங்கத்தைப் போக்கினார்.
அதனால் அவருக்கு நிஷ்களங்க மகாதேவர் எனப்
பெயர்.

No comments:
Post a Comment