ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Friday, September 28, 2012

சுவாமி விவேகானந்தரின்150ஆவது ஜனன தின வாகரை பிரதேச விழா 28.09.2012

சுவாமி விவேகானந்தரின்150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 28.09.2012 வெள்ளிக்கிழமை காலை 07.30 மணிக்கு கதிரவெளி விக்னேஸ்வரா ஆலய முன்றலில் இருந்தும் வாகரைப் பிரதேச செயலக முன்றலில் இருந்தும்  எழுச்சி பேரணியாக ஆரம்பமாகி மட்/வம்மிவட்டவான் வித்தியாலயத்தை  அடைந்து  மு .ப 10.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி பி.ப 01.30 மணி அளவில் நிறைவுற்றன.

நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதற்காக மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் தலைமை சுவாமி கபாலீஸ்வரானந்த மகராஜ் வருகை தந்து

நந்திக்கொடி அசைத்து நிகழ்வினை தொடக்கிவைத்தார்




 

வாகரை பிரதேச ஒருங்கிணைப்பாளர் திரு.நா.குணலிங்கம் ஐயா அவர்களுடன் விழாக் குழு தலைவர் திரு.எஸ்.மோகனசுந்தரம் ஐயா அவர்களும் நிகழ்ச்சியினை மங்கலவிளக்கேற்றி ஆரம்பித்தல்.


ஆசியுரையை வழங்க ஆன்மீக அதிதியாக வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் கலந்து சிறப்பித்தார்.கௌரவ அதிதியாக கலந்து கொண்ட கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் திருமதி.சுபா சக்கரவர்த்தி அம்மணி அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார்


சுவாமி விவேகானந்தரின் படத்திற்கு புஷ்பாஞ்சலி.....








பிரதேச ஒருங்கிணைப்பாளர் திரு.நா.குணலிங்கம் அவர்கள் உரையாற்றுதல்.


வீர இளைஞர்களுக்கு........என்ற தலைப்பில் பேச்சாளர்களில் ஒருவரான திரு.க.ரூபன் சொற்பொழிவாற்றும் போது



கலை நிகழ்வுகளில் சில....



700 பேர் கலந்து கொண்ட எழுச்சி ஊர்வலம்.






நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினர்.
சொற்பொழிவாளர்களின் விபரங்கள்
01.வீர இளைஞர்களுக்கு........
திரு.க.ரூபன்
02.இந்துப் பெண்மணிகள்........
செல்வி.வ.யமுனா
03.தொண்டும் பேரானந்தமும்..............
திரு.க.தியாகராஜா – இந்து ஆலய ஒன்றிய பிரச்சாரச் செயலாளர்,மட்டக்களப்பு
04.மத மாற்றம் தேவையா?
செல்வி.சீ.சதாகினி
05.இந்து சமுதாய ஒற்றுமை
திரு.ப.சரஞ்சன்

பிரதேச விழாக்குழு

திரு.நா.குணலிங்கம்
பிரதேச ஒருங்கிணைப்பாளர்
மாவட்ட விழாக் குழு


பிரதேச ஐவர் குழு

தலைவர் – திரு.எஸ்.மோகனசுந்தரம் 
உப தலைவர் – திரு.கே.கணபதிப்பிள்ளை 
செயலாளர் –திரு.மு.நவரெட்ணராஜா
உப செயலாளர் – திருமதி.ஜெ.டிகநாதன்
பொருளாளர் – திரு.செ.மங்களச்சந்திரா






No comments:

Post a Comment