சுவாமி விவேகானந்தரின்150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பிரதேச
விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 28.09.2012 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு பாட்டாளிபுரம் கிராமத்தில் பிரதேச ஒருங்கிணைப்பாளர் திருமதி.உமா ரதீஷ்வரன் ஆசிரிய ஆலோசகர் தலைமையில் நடைபெற்றது. சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்வலத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாக தொடர்ந்து பஜனை நிகழ்வு திரு.சுதர்சன் ஆசிரியரினால் நிகழ்த்தப்பட்டது.வரவேற்புரையை திரு.யோகநாதன் ஆசிரியர் நிகழ்த்த தொடர்ந்து சொற்பொழிவுகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.நிகழ்வில் 400 பேர் கலந்து சிறப்பித்தனர்.
சொற்பொழிவாளர்களின் விபரங்கள்
01.வீர இளைஞர்களுக்கு........
திருமதி.உமா ரதீஷ்வரன் – ஆசிரிய ஆலோசகர்
02.இந்துப் பெண்மணிகள்........
திருமதி.சாந்தி ராமலிங்கம்
03.தொண்டும் பேரானந்தமும்..............
திரு.சிவசீலன்
04.மத மாற்றம் தேவையா?
திருமதி.உமா ரதீஷ்வரன் – ஆசிரிய ஆலோசகர்
05.இந்து சமுதாய ஒற்றுமை
திரு.பாக்கியலிங்கம் – அதிபர்

No comments:
Post a Comment