ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Monday, September 24, 2012

வாழைச்சேனை பிரதேச விழா 23.09.2012



சுவாமி விவேகானந்தரின்150வது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150

வது ஜனன தின நிகழ்வானது 23.09.2012 ஞாயிற்றுகிழமை காலை 08.00 மணிக்கு கறுவாக்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இருந்து எழுச்சி பேரணியாக ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக
மட்/ வாழைச்சேனை இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தை அடைந்து  மு .ப 10.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி பி.ப 01.15 மணி அளவில் நிறைவுற்றன.

நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதற்காக மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் தலைமை சுவாமி கபாலீஸ்வரானந்த மகராஜ் வருகை தந்து ஆசியுரையும் வழங்கினார்.


655 பேர் கலந்து கொண்ட எழுச்சி ஊர்வலம்.


மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.மு.பவளகாந்தன் ஐயா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை மங்கலவிளக்கேற்றி ஆரம்பித்தல்.


கௌரவ அதிதியாக கலந்து கொண்ட கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் திருமதி.சுபா சக்கரவர்த்தி அம்மணி அவர்கள் மங்கலவிளக்கேற்றி ஆரம்பித்தல்.

பிரதேச ஒருங்கிணைப்பாளர் திரு.ச.வசந்தகுமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துதல்




சுவாமி விவேகானந்தரைப்பற்றி பேச்சாளர்களில் ஒருவரான திரு.த.தர்மபாலன்(ஆசிரிய ஆலோசகர் ) சொற்பொழிவாற்றும் போது


கலை நிகழ்வுகளில் ஒரு அம்சம் 

நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினர்.
சொற்பொழிவாளர்களின் விபரங்கள்
01.வீர இளைஞர்களுக்கு........
திரு.த.தர்மபாலன் - ஆசிரிய ஆலோசகர்
02.இந்துப் பெண்மணிகள்........
திருமதி.சோ.ஜெயரஞ்சித் – ஆசிரியை
03.தொண்டும் பேரானந்தமும்..............
திரு.மூ.முத்துமாதவன் – கவிஞர்
04.மத மாற்றம் தேவையா?
செல்வி.சீ.லோகேஸ்வரி - ஆசிரிய ஆலோசகர்
05.இந்து சமுதாய ஒற்றுமை
திரு.க.கிருஷ்ணப்பிள்ளை – ஓய்வு பெற்ற அதிபர்

பிரதேச விழாக்குழு

திரு.ச.வசந்தகுமார்
பிரதேச ஒருங்கிணைப்பாளர்
மாவட்ட விழாக் குழு

பிரதேச ஐவர் குழு

தலைவர் – திரு.நா.மகாலிங்கம்
உப தலைவர் – திரு.மு.சுப்பிரமணியம்
செயலாளர் – திருமதி.சோ.ஜெயரஞ்சித்
உப செயலாளர் – திரு.கி.கலைப்பிரியன்
பொருளாளர் – திரு.ந.மோகனரூபன்


No comments:

Post a Comment