1 அஞ்சாமை: வாழ்க்கையில் எது நடந்தாலும் அஞ்சாமல் அதை ஏற்று இறை நம்பிக்கையுடன் வாழ்தல்.
2 உள்ளத்தூய்மை: உள் மனதில் என்னை அடைய வேண்டும் என்ற திடமான, தீவிர விருப்பம் கொண்டிருத்தல்.
3 ஞானயோகத்தில் உறுதி: என்னைத் தத்துவ விளக்கத்துடன் அறிவதற்கு, எந்தச் சூழ்நிலையிலும் சமநிலையில் இருப்பது.
4 ஈகை: சாத்வீகமான தானம் செய்தல் சிறந்தது.ஆன்மீக விழிப்புணர்விற்காக அதன் வளர்ச்சிக்காக செலவு செய்தல்.
5 தன்னடக்கம்: ஐம்புலன்களையும் சுயக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
6 வேள்வி: தன் குலக்கடமைகளை முறையாகச் செய்து வருதல்.
7 சாஸ்திரங்களில் நம்பிக்கை: சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட நீதிகளைத் தம் வாழ்க்கை நெறிகளாக மேற்கொள்ளுதல்.
8 தவம்: தன் கடமைகளைச் செய்கின்றபோது வரும் இன்னல், இடையூறுகளை மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்ளுதல்.
9 எளிமை: உடலாலும், உள்ளத்தாலும், வாக்காலும், செயல்களாலும் சரியாக, எளிமையாக வாழ்தல்
10 கொல்லாமை: உடல், உள்ளம், வாக்கால் எந்தப் பிராணிக்கும் சிறிதளவேனும் துன்பம் தராதிருத்தல்.
11 வாய்மை: கண்டதையும், கேட்டதையும், அறிந்ததையும் உள்ளபடி அப்படியே இனிய சொற்களால் சொல்வது
12 சினவாமை: எவரிடமும், எதனிடமும் குரோதம் கொள்ளாதிருத்தல்.்
13 துறவு: உலகியல் ஆசைகளை, விருப்பு வெறுப்புகளைத் துறப்பது.(உள்ளத்தால்)
14 அமைதி: உள்ளத்தில் விருப்பு, வெறுப்புக்களால் ஏற்படும் சஞ்சலங்களை இல்லாமற் செய்வது.
15 கோள் பேசாதிருத்தல்:
16 ஜீவ தயை: எல்லா உயிரினங்களிடமும் கருணை கொள்ளல்.
17 அவாவின்மை: உலகியல் பொருள்களில் பேராசை கொள்ளாமல் இருத்தல்.
18 மென்மை: எந்நேரமும் கனிந்த, மென்மையான இதயத்தைக் கொண்டிருத்தல்.
19 நாணுடைமை: செய்யத்தகாததைச் செய்வதில் வெட்கப்படுதல்.
20 சலியாமை: சபல சித்தம், அவசரப்படுதல் இரண்டினாலும் சஞ்சலப்படாமல் இருத்தல்
21 ஒளி: உடல், வாக்கு இரண்டிலும் பொலிவும், செல்வாக்கும் கொண்டிருத்தல். இதனை தேஜஸ் என்று சொல்வார்கள்.
22 பொறையுடைமை: வலிமை. தண்டனை அளிக்கும் அதிகாரமும், திறமையும் இருந்தாலும் குற்றவாளியின் குற்றத்தை மன்னித்தல்.
23 மன உறுதி: எந்தச் சூழ்நிலையிலும் தைரியமும், பொறுமையும் கொண்டிருத்தல்.
24 தூய்மை: உடலையும் உள்ளத்தையும் தூயதாக வைத்திருத்தல்.
25 துரோகமின்மை: பழிவாங்கும் உணர்ச்சி இல்லாதிருத்தல்.
26 தன்மான இழப்பு: மதிப்பை எதிர்பார்க்காமல் இருப்பது.
அதாவது, உயர்வு மனப்பான்மையும், செருக்கும் கொள்ளாதிருத்தல். அகங்காரத்தை அறவே ஒழித்துக்கட்ட இதுவே சிறந்த வழி.

இவை யாவும் தெய்வீக அருள் பெற்ற மனிதரின் இலட்சணங்கள். இந்த இயல்புகளைக் கொண்டிருக்கும் மனிதன் தான் என்னிடம் பக்தி செலுத்தத் தகுதி படைத்தவன் என்கிறார் கண்ணபிரான்
No comments:
Post a Comment