ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Sunday, September 30, 2012

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தின களுதாவளை பிரதேச விழா 29.09.2012

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனன தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி,களுதாவளை ,தேற்றாத்தீவு,மாங்காடு,செட்டிபாளையம்,குருக்கள்மடம், பிரதேச விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தின நிகழ்வானது 29.09.2012 சனிக்கிழமை காலை 07.30 மணிக்கு எழுச்சி பேரணியாக களுவாஞ்சிகுடி,களுதாவளை ,தேற்றாத்தீவு,மாங்காடு,செட்டிபாளையம்,குருக்கள்மடம் ஆகிய கிராமங்களில் இருந்து ஆரம்பமாகி மட்/ களுதாவளை மகா வித்தியாலயத்தை  அடைந்து  மு .ப 10.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி பி.ப 01.00 மணி அளவில் நிறைவுற்றன.


நிகழ்ச்சிகளை தொடங்கி வைப்பதற்காக மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் தலைமை சுவாமி கபாலீஸ்வரானந்த மகராஜ் வருகை நிகழ்வினை தொடக்கிவைத்தார்.




மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,அகில இலங்கை விழாக் குழு திரு.மு.பவளகாந்தன் ஐயா அவர்கள் நிகழ்ச்சியினை மங்கலவிளக்கேற்றி ஆரம்பித்தல்.




ஆசியுரையை வழங்க ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தம் குருக்கள் கலந்து சிறப்பித்தார்.




 பிரதம அதிதியாக கலந்து கொண்ட பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அம்மணி அவர்கள் கலந்து சிறப்பித்தார் 


பிரதேச விழாக்குழு தலைவர் திரு.ச.நாகராசா (உதவிக் கல்விப் பணிப்பாளர்) அவர்கள் உரையாற்றுதல்.



வீர இளைஞர்களுக்கு........என்ற தலைப்பில் பேச்சாளர்களில் ஒருவரான கலாபூசணம் தேனூரான் சொற்பொழிவாற்றும் போது



சுவாமி விவேகானந்தரின் படத்திற்கு புஷ்பாஞ்சலி 


600 பேர் கலந்து கொண்ட எழுச்சி ஊர்வலம்.
 


நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினர்.




கலை நிகழ்வுகளில் சில....









சொற்பொழிவாளர்களின் விபரங்கள்
01.வீர இளைஞர்களுக்கு........
கலாபூசணம் தேனூரான்
02.இந்துப் பெண்மணிகள்........
திரு.ந.புவனசுந்தரம்
03.மக்கள் சேவையே மகேசன் சேவை...
திரு.கு.நாகேந்திரன்
04.மத மாற்றம்
திரு.த.விமலானந்தராசா
05.இந்து சமுதாய ஒற்றுமை
திரு.எஸ்.எஸ்.சுதர்சனன் 


















No comments:

Post a Comment